Saturday, September 5, 2009

முல்லைப் பெரியாறும் துரோகத்தின் வரலாறும் -பாகம் ஒன்று



முல்லைப் பெரியாறும் துரோகத்தின் வரலாறும்
-பாகம் ஒன்று

தமிழகத்தின் ஆறுகள் சிதைந்த வரலாறு

"நீரின்றி அமையாது உலகு" என்றார் வள்ளுவர். இன்றையச்சுழலில் 'சில ஆறுகள் இன்றி அமையாது தமிழகம்' என்றே குறிப்பிடலாம். தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனித உயிர்களின் அடிப்படை வாழ்வாதாரங்களில் நீர் ஆதாரமும் ஒன்று. மனித உயிர்களால் உற்பத்தி செய்யமுடியாத நீர் ஆதாரமே இயற்க்கை வழங்கிய மிகப்பெரும் கொடையாகும். மேலும் இந்நீர் ஆதாரமானது மனித சமுகத்தின் உற்பத்தி நடவடிக்கைகளான வேளாண்மை மற்றும் தொழில்துறைக்கும் அடிப்படையாகவும் அமைந்திருக்கிறது.
தமிழ்நாட்டின் பெரும்பான்மை உற்பத்தி நடவடிக்கையானது வேளாண்மைத்துறை சார்ததாகவே அமைந்திருக்கிறது. இயற்கையாய் உருவெடுத்துத் தன் போக்கில் ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைத் தடுத்தும், மறித்தும், திசை திருப்பியும். அணைகளை எழுப்பியும் உகந்த வகையிலே பயன்படுத்தமுடியும். தமிழ்நாட்டில் ஓடிய வைகையாறு, காவிரியாறு, பவானியாறு ,நொய்யலாறு, தாமிரபரணியாறு, பாலாறு, ஆரணியாறு, கொரட்டளையாறு, கூவமாறு, அடையாறு, ஓங்கூராறு, வராகஆறு, மலட்டாறு, பெண்ணையாறு, கடிலமாறு, வெள்ளாறு, அக்கினியாறு, அம்புலியாறு, வெண்ணாறு, கொலுவநாறு, பம்பாறு, மணிமுத்தாறு, கோட்டைக்கரையாறு, உத்திரகோசமங்கையாறு, குண்டாறு, வேம்பாறு, வைப்பாறு, கல்லாறு, கோரம்பள்ளமாறு, கரமனையாறு, நம்பியாறு, அனுமானாறு, பல்லவாறு, வள்ளியாறு, கோதையாறு போன்ற ஆறுகள்.



தமிழ்நாட்டின் குடிநீர்த் தேவையையும் வேளாண்மை உற்பத்தித் தேவையையும் நிறைவு செய்து வந்தன. அதே சமயத்தில் வேகமாக உருவெடுத்துவந்த தரகு-முதலாளித்துவத் தொழில்துறை ஆலைகளாலும், பெருநகரங்கள் உருவாக்கத்தாலும், நச்சுக்க்ழிவுநீர்க் கலப்பாலும், தமிழ்நாட்டில் ஓடிய பல ஆறுகள் சிதைந்தும், காணாமலும்,அழிக்கப்பட்டும் விட்டன. ஆறுகளும் நீரின்றி வறண்டு போய்க்கிடக்கின்றன.

'காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி - என


மேவிய ஆறு பலவினும் - உயர்
வெள்ளை மணல் கொண்ட தமிழ்நாடு'

என்ற கண்னதாசனின் பாவரிகள் தமில்நாட்டில்லுள்ள ஆறுகளின் அவலத்தை உணர்த்தும். ஓர் ஆற்றின் இக்கரையிலிருந்து அக்கரைசெல்வதற்கு அன்று ஓடம் தேவைப்பட்டது. ஆனால் இன்றோ காலில் செருப்பு இருந்தால் மட்டுமே ஆற்றைக் கடக்க முடியும் என்ற நிலையில் தமிழ்நாட்டின் ஆறுகள் மணல் திட்டுகலாய்க் காட்சியளிக்கின்றன. இம்மாற்றங்கள் இயற்கையினால் மட்டுமே நிகழ்ந்ததாகச் சொல்லமுடியாது. தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள கருநாடகம்,ஆந்திரம், மற்றும் கேரள அரசுகளின் துரோகங்களும், அத்துரோகங்களுக்கு டில்லி அரசு துணை சென்றதும் ஒரு காரணமாகும். காவிரி ஆற்றில் துரோகம்.... பாலாற்றில் துரோகம்...... இந்த வரிசையில் முல்லைப் பெரியாறு அணையிலும் தொடர் துரோகங்கள்.....

முல்லைப் பெரியாற்று நீர் யாருக்குச் சொந்தம்? அதன் வரலாறு என்ன? அதற்க்கு இழைக்கப்பட்ட துரோகங்கள் என்ன? பெரியாற்றின் உரிமைகலுக்காய்ப் போராடுவதன் பாதை என்ன? முல்லைப் பெரியாற்றில் தமிழர் உரிமையை வென்றெடுப்பது எப்படி?

தொடரும்....

4 comments:

குடந்தை அன்புமணி said...

நல்ல விரிவாக எழுதியிருக்கிறீர்கள்.கட்டுரையின் தொடர்ச்சியை படிக்க மிகவும் ஆர்வமாய் உள்ளேன்.

குடந்தை அன்புமணி said...

கருத்துரைகள் இடுவதற்கானதை க்ளிக் செய்ய முடியாமல் எழுத்துருக்கள் மங்கலாக உள்ளது. டாஷ்போர்டு சென்று ஃபாண்ட் கலர் என்பதை க்ளிக் செய்து கறுப்பு நிறத்தை தேர்ந்தெடுங்கள்.

தமிழ் முல்லை said...

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி,
ஒவ்வொருவாரமும் பதிவு தொடரும்...

Kumky said...

நல்ல பயனுள்ள தகவல்கள்.
தொடர்ந்து படிக்க ஆவலாயுள்ளோம்.
துரோகங்களின் வரலாற்றினை விரிவாக எடுத்துரைப்பீர்களென நம்புகின்றேன்,
நன்றி.

Post a Comment