Tuesday, February 22, 2011

இந்திய விரிவாதிக்க நலனுக்காக தமிழன் இருந்தாலென்ன?செத்தாலென்ன?



தமிழக மீனவர்கள் சிங்கள இராணுவத்தால் அன்றாடம் படுகொலை செய்யப்படுவதைகண்டித்து புரட்சிகர இளைஞர் முன்னணி, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைமுன்னணி, புரட்சிகர மாணவர் முன்னணி,புரட்சிகர தொழிலாளர் முன்னணி. சார்பாகதோழர் மார்க்ஸ், தலைமையில் சென்னையில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் முன்பு28/01/2011 காலை 11.00 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அன்றாடம் தமிழக மீனவர்கள் சிங்கள இனவெறி அரசால் படுகொலைசெய்யப்படுகிறார்கள். இந்திய விரிவாதிக்க நலனுக்காக தமிழன் இருந்தாலென்ன?செத்தாலென்ன? என்ற இந்திய அரசின் நிலையை கண்டித்தும் தமிழக அரசிடம்இந்திய நுகத்தடியை துக்கியேறி, தமிழக மீனவர்களுக்கு ஆயுதம் வழங்கு என்றகோரிக்கையை முன் வைத்தும், டெல்லியின் எடுபிடியாக இருந்து தமிழகத்தைகொள்ளையடிக்கும் கருணாநீதியையும், முதலை கண்ணீர் வடிக்கும்ஜெயலலித்தாவையும் கண்டித்து முழக்கமிட்டனர்.

தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி டெல்லி அரசிடம் கடிதம் எழுதுவதாக கூறி தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார், இதுவரைக்கும் 500 மேற்பட்ட தமிழக மீனவர்க ளை சிங்கள இனவெறி அரசு சுட்டு கொன்றுள்ளது. விரிவாதிக்க வெறிபிடித்த இந்திய அரசோ ராஜபக்சே அரசை ஆதரித்துவருகிறது.
என கண்டித்தும், தமிழக இறையாண்மை உரிமைக்காக போராட வேண் டும் என பேசினர்

இந்த ஆர்ப்பாட்டம் சென்னை ஆழ்வார்பேட்டை தபால் நிலையம் அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு, டி.டி.கே சாலை வழியே சென்று இலங்கை தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் செய்த தோழர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

மணிவண்ணன்

புரட்சிகர இளைஞர் முன்னணி,

சென்னை.தமிழ்நாடு.






No comments:

Post a Comment