Wednesday, July 15, 2009

ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு தனித் தமிழ் ஈழமே தீர்வு என்பதை வலியுறுத்தி பொதுக்கூட்டம்.


ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு தனித் தமிழ் ஈழமே தீர்வு என்பதை வலியுறுத்தி பொதுக்கூட்டம்.

வணக்கம். இலங்கையில் சிங்கள இனவெறி அரசால் ஈழத் தமிழர்கள் நாள்தோறும் இனப்படுகொலைக்கு ஆளாகி வருகிறார்கள். சமீபத்தில் முப்படைகளைக் கொண்டு தமிழினத்தை அழித்துவந்த சிங்கள அரசு, தற்போது விடுதலைப் புலிகளை ஒடுக்கிவிட்டோம் என்று அறிவித்துவிட்டு, ஈழத் தமிழர்களை அகதி முகாம் என்ற பெயரில் திறந்தவெளிச் சிறைச்சாலையில் அடைத்து சித்திரவதை செய்துவருகிறது. நிவாரணப் பொருட்களைக் கூட அனுமதிக்காமல் ஈழத் தமிழர்களை பட்டினி போட்டு கொள்கிறது.

இந்நிலையில், ஈழத் தமிழர் பிரச்சினை - தமிழகம் என்ன செய்ய வேண்டும் என்ற தலைப்பில் புரட்சிகர இளைஞர் முன்னணி, புரட்சிகர தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு புரட்சிகர அமைப்புகள் தமிழகம் எங்கும் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக பொன்னேரியில் கடந்த 10-07-2009 அன்று மாலை புரட்சிகர இளைஞர் முன்னணி பொதுக்கூட்டத்தை நடத்தியது. இந்த கூட்டத்திற்கு தோழர் செல்வம் தலைமை தாங்கினார். தோழர்கள் மார்க்ஸ், ஆனந்தன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

இப்பொதுக் கூட்டத்தில் ஈழ விடுதலைக்கு ஆதரவாக 04.02.2009 அன்று பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து இயக்கம் மேற்கொண்ட சென்னை - பொன்னேரி தோழர்கள் 3 பேரும் மீது பேருந்து மீது கல்வீச்சு , மன்மோகன்சிங் , சோனியா ஆகியோரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக பொய்வழக்கு சுமத்தி சிறையில் அடைத்தது. மற்றும் பொன்னேரியில் 2 பேரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே சன-25 ல் இந்தி கொடூரன் எரிப்பு போராட்டத்தில் கைதாகி விடுதலையான தோழர்களை மறுபடியும் பழிவாங்கும் நோக்கோடு இவ்வழக்கில் பொன்னேரி காவல் துறைஆய்வாளர் தயாளன் மற்றும் துணை ஆய்வாளர் சத்தியபாமா ஆகியோர் நான்கு பிரிவுகளில் இணைத்துள்ளனர். சென்னை-பொன்னேரி தோழர்கள் 2 பேருக்கும் 130 நாட்கள் வரை பிணை கிடைக்காமல். உயர்நீதி மன்றமும் ஒடுக்குமுறைக்குள்ளாக்கினர் என்பதை விளக்கினர். இப் பொதுக்கூட்டம் கூட 4 மாதம் போராடி உயர்நீதி மன்ற ஆணை பெற்றே நடத்தப்பட்டது.அப்பகுதியைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

1 comment:

Thamizhan said...

தங்கள் உறவினர் நண்பர்களை இலங்கைப் பொருட்களைப் புறக்கணிக்கச் சொல்லுங்கள்.

www.NoToSriLanka.com

Post a Comment